நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட வெளியீட்டுத் தேதி!
பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...
நடிகர் நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரம், பிரேமம், சர்வம் மாயா போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்ததன் மூலம் மொழிகளைக் கடந்து ரசிகர்களைப் பெற்றவர் மலையாள நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில், கடந்த 2025 இல் வெளியான “சர்வம் மாயா” படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றி பெற்றது.
பிரேமலு பட இயக்குநர் கிரீஷ் ஏடி மற்றும் நிவின் பாலியின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பெத்லகேம் குடும்ப யூனிட்”. நடிகர்கள் ஃபகத் ஃபாசில், திலீஷ் போத்தன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், “பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகும் என இன்று (ஜூலை 18) படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
The release date for actor Nivin Pauly's film "Bethlehem Kudumba Unit" has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.