நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும்... வைரலாகும் தேவதர்ஷினியின் விடியோ!
நடிகை தேவதர்ஷினியின் வைரலாகும் நீட் எதிர்ப்பு, ஆதரவு விடியோ குறித்து...
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தேவதர்ஷினியின் நீட் விளம்பரத்திற்கு ஆதரவாக நடித்த விடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பார்த்திபன் கனவு படத்தில் அறிமுகமான தேவதர்ஷினிக்கு சிறந்த நகைச்சுவையாளரின் தமிழ்நாடு அரசின் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் சேத்தனின் மனைவியான இவர் வேல், படிக்காதவன், காஞ்சனா, 96, மெய்யழகன் உள்ளிட்ட பல படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்து கவனம் பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
கடைசியாக யூத் படத்தில் அம்மாவாக சிறப்பாக நடித்திருந்தார். தற்போது, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் பலரும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பங்கேற்ற நடிகை தேவதர்ஷினி, “தில்லியில் மாணவர்கள் அடிபட்டதை ஒரு தாயாக பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. வயிறெல்லாம் கலங்குகிற மாதிரி இருந்தது” எனப் பேசியிருந்தார்.
முன்னதாக, தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கான பயிற்சியில் சேருங்கள் என்ற விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த விடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் ”ஏன் இந்த இரட்டை நிலை” எனவும் ”பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும்” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Devadarsini Chetan NEET ban protest and NEET advertisement video viral
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.