கலங்காதே... நடிகர் விஷாலின் மகுடம் 3-வது பாடல்!
மகுடம் 3-வது பாடல் வெளியானது...
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகும் மகுடம் திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியாகியுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் 'மகுடம்’ படத்தின் மூலம் நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஷால் கேங்ஸ்டராக நடித்துள்ளார். இயக்குநராகும் தனது 30 ஆண்டுகால கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக விஷால் கூறியிருந்தார். இந்த நிலையில், கலங்காதே என்கிற இப்படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளனர். ஜிவி இசையமைத்து பாடிய இதனை கருணாகரன் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
The third song from the movie Magudam, starring actor Vishal, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.