விரைவில் ரஜினி - 173 படப்பிடிப்பு!
ரஜினி - 173 படப்பிடிப்பு குறித்து...
நடிகர் ரஜினிகாந்த்தின் 173வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியளவில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினி தன் 173-வது படத்தில் இணையவுள்ளார். இப்படத்தின் இயக்குநர் யாரென கேள்விகள் இருந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்கமல் நிறுவனம் வாழ்த்துகள் தெரிவித்து விடியோ ஒன்றை வெளியிட்டனர். வழக்கமாக, தங்கள் தயாரிப்பிலிருக்கும் படங்களின் இயக்குநர், நடிகர்களுக்கே இப்படி வாழ்த்து தெரிவிப்பார்கள் என்பதால் ரஜினி - 173 படத்தை அஷ்வத் இயக்குவது உறுதியாகியுள்ளதாகவே தெரிகிறது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, சென்னை பூந்தமல்லியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.