எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போல யாருமில்லை... இளையராஜா புகழாரம்!
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி இளையராஜாவின் பதிவு...
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா, “எஸ்.பி.பி போல யாருமில்லை” எனக் கூறியுள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜாவும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் பாடலின் காப்புரிமை ரீதியாக சிறு விரிசல் ஏற்பட்டு பின்னர் நீங்கியது.
Advertisement
Advertisement
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓர் இசையமைப்பாளரின் தொலைநோக்குப் பார்வையை எஸ்.பி.பி-யை விட வேகமாகப் புரிந்துகொண்டவரும், ஒரு பாடலில் அவரைவிட அதிக கவனம் செலுத்தியவரும் வேறு யாருமில்லை. அவரது வாழ்க்கை, நட்பு மற்றும் 50,000 பாடல்கள் என்ற இணையற்ற சாதனையைக் கொண்டாடுகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எஸ்.பி.பி. எனக் கூறியுள்ளார்.
இளையராஜா தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி படத்திற்காக இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார்.
Unmatched achievement of 50,000 songs Happy Birthday, SPB says Ilayarajaa
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.