ஆபாசம், அருவருப்பு... பெத்தி படக்குழுவை விமர்சிக்கும் ஜான்வி கபூர் ரசிகர்கள்!
பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து...
பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து இணையவாசிகளும் அவரது ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி திரைப்படம் நேற்று (ஜூன்4) உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளிலே ரூ.135.36 கோடி வசூலித்துள்ளது.
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூரரைக் காட்சிப்படுத்தியுள்ள விதங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. இந்தப் படத்தின் டிரைலர் வெளியானபோதே இது குறித்த பேச்சு எழுந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதிக சம்பளம் கொடுத்து நடிகைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவமானம் என்ற ஒரு பதிவுக்கு ஜான்வி கபூர் லைக் இட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆச்சியம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரை மோசமான காமிரா கோணத்திலும் ஆபாசமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
நாயகன் ராம் சரணே நடிகையிடம் அத்துமீறி நடித்துள்ளதாகவும் விமர்சனங்கள் கடுமையாகியுள்ளன. ராம் சரண் படத்தில் சமூக அரசியல் போராட்டம் நடத்துவதும் நடிகைக்கு உடலின் நடுப்பகுதிக்கு க்ளோசப் வைத்திருப்பதும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.