பீப் சாங்... தனக்குப் பிடித்த பாடலாகப் பதிவிட்ட சிம்பு!
மீண்டும் சர்ச்சையில் சிக்கும் நடிகர் சிம்புவின் இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து...
நடிகர் சிலம்பரசன் தனக்குப் பிடித்த சிம்பு பாடலாக பீப் சாங்கைப் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான டி.ஆர்.ராஜேந்திரன் மகன் சிலம்பரசன் சிறு வயது முதலே நடித்து வருகிறார். இவரும் அவரது தந்தையைப் போலவே பாடல் எழுதி பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் பீப் சாங் என்ற பாடல் இணையத்தில் வெளியானது. காதல் தோல்வியினால் பெண்களை இழிவுப்படுத்துவதாக அமைந்த அந்தப் பாடல் மிகவும் வைரலானது.
Advertisement
Advertisement
பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தார்கள். பின்னர், சிம்பு இந்தப் பாடலை தான் வெளியிடவில்லை என்றும் யாரோ லீக் செய்துவிட்டார் எனவும் கூறியிருந்தார்.
தற்போது, இன்ஸ்டாகிராமில் தனக்குப் பிடித்த சிம்பு பாடல் என்ற டெம்ப்ளேட் வைரலாகி வருகிறது. ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த பாடலை ஸ்டோரியில் வைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார்.
தனக்கு மிகவும் சிம்பு பாடல் என பீப் சாங்கில், ”தண்ணி அடிக்காதீங்க...” என்ற வரிகளைப் பதிவிட்டுள்ளார். சிம்பு ரசிகர்கள் இதனைப் பாராட்டினாலும் சிலர் மீண்டும் சர்ச்சையை கிளப்புவதாக இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.
Beep song is my favourite says STR in his insta page controversial starting
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.