முகப்பு
செய்திகள்

ரஜினியின் தர்மன் படப்பிடிப்பு தொடக்கம்..! புதிய போஸ்டர்!

நடிகர் ரஜினியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறித்து...

Updated On : 25 ஜூன் 2026, 7:08 pm IST
தர்மன் புதிய போஸ்டர். - படம்: இன்ஸ்டா / அஷ்வத் மாரிமுத்து.
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து புதிய போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார்.

இந்தப் படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் தெர்வித்துள்ளார். சமீபத்தில் இதன் முதல் தோற்ற போஸ்டருக்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டிருந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் மருத்துவர் வேடத்தில் ரஜினி போஸ் கொடுக்கும் காட்சி கவனம் பெற்று வருகிறது.

summary

Filming for Rajini's 'Dharman' begins! New poster released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments