FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாரா த்ரிஷா?

பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாரா நடிகை த்ரிஷா என்பது குறித்து

கே. பாக்யராஜ் - நடிகை த்ரிஷா - from x
பகிர்:

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், மாரடைப்பால் சனிக்கிழமை காலை மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பாக்யராஜ் உடலுக்கு நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் வியாழக்கிழமை பாக்யராஜ் பங்கேற்று சென்னை திரும்பிய நிலையில், சனிக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.

ஜூன் 25ஆம் தேதி நடந்த திருமணத்தில், ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றிருந்த நிலையில், மறைந்த கே. பாக்யராஜும் பங்கேற்றிருந்தார். அவருடன் திருமணத்தில் பங்கேற்று சந்தோஷமாக பேசி மகிழ்ந்து, விருந்து சாப்பிட்ட நிலையில், சனிக்கிழமை காலையிலேயே இந்த அதிர்ச்சிச் செய்தி வெளியாகி பலருக்கும் குறித்தும் திரைப் பிரபலங்கள் பகிர்ந்துகொண்டு, தங்களது அதிர்ச்சி மற்றும் இரங்கலைப் பதிவு செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

அதுபோல, நடிகை த்ரிஷாவும், கோவாவில் நடந்த திருமணத்தில் ஒன்றாக உணவு அருந்தியது குறித்து பதிவிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால், அவர் பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினாரா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

நடிகை த்ரிஷா, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில், பாக்யராஜ் இல்லத்துக்கு வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, மனைவி பூர்ணிமா, மகன், மகள், மருமகள் என குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். பாக்யராஜ் உடலைப் பார்த்து கண் கலங்கி நின்றார் த்ரிஷா. நடிகை த்ரிஷா, தன்னுடைய அம்மாவுடன் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

த்ரிஷா வெளியிட்டிருந்த இரங்கலில், பாக்யராஜ் சார் நேற்றுதான் ஒன்றாக உணவு சாப்பிட்டோம். இன்று இந்த மனதை உடைக்கும் செய்தியை கேட்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

summary

Regarding whether actress Trisha paid her last respects to Bhagyaraj's mortal remains.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments