உதயநிதி பேச்சுக்கு மௌனம் கலைத்தாரா த்ரிஷா? சங்கடமாக இருப்பதாக பதிவு
உதயநிதி பேச்சுக்கு கடும் விமர்சனம் எழுந்திருந்த நிலையில் அது குறித்து மௌனம் கலைத்திருக்கிறாரா த்ரிஷா என்பது குறித்து..
தஞ்சையில் நடைபெற்ற திமுக போராட்டத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் மற்றும் பெண்கள் குறித்து மோசமாக பேசியது கடுமையாக விமர்சிக்கப்பட்ட பிறகு, நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் தகவல் பேசுபொருளாகியிருக்கிறது.
அவர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தாலும், அதில் பல சூசகமான அர்த்தங்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி அவர் என்னதான் பதிவிட்டிருந்தார் என்று இன்று தேடினால் பலருக்கும் கிடைக்காது. அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை ஸ்டோரியாகப் பதிவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
அதாவது, இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்திருந்தது என்னவென்றால், இந்த வயதிலும் நாடகத்தனத்தைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதியுங்கள், சற்று நிம்மதியை தேடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், நடிகை திரிஷாவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது உதயநிதியின் பேச்சுக்கு எதிர்வினையா என்றும் கேள்விகள் எழுகின்றன.
அடுத்த பதிவில், நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும், எனவே முடிந்தவரை நல்லதையே செய்யுங்கள். நல்லவராகவே இருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு யாருக்கான அறிவுரை. அவரது தனிப்பட்ட வாழ்வில், அவருக்கு மட்டுமே தெரிந்தவர்களுக்கான அறிவுரையா, பொது வெளியில் இருப்பவர்களுக்கான அறிவுரையா, இல்லை எல்லோருக்குமான அறிவுரையா என்ற எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.
த்ரிஷாவின் இதுபோன்ற பதிவுகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருப்பதால் பலரும் அவர்களுக்குத் தோன்றிய கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
Did Trisha break her silence on Udhayanidhi's remarks? She posts that she feels uncomfortable.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.