துப்பாக்கி கிடைச்சா... சிவகார்த்திகேயனைத் தாக்கிய ஆர்ஜே பாலாஜி?
கருப்பு டிரைலர் வசனம் குறித்து...
கருப்பு திரைப்படத்தின் டிரைலரில் நடிகர் சிவகார்த்தியனைத் தாக்கும்படியான வசனம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் சூர்யா நடித்து முடித்த கருப்பு திரைப்படம் நாளை மறுநாள் (மே. 14) திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக சூர்யா ரசிகர்கள் காத்திருப்பதால் வணிக ரீதியாக முதல் நாள் வசூல் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, படத்தின் டிரைலர் வெளியாகி சில காட்சிகள் கவனம் பெற்றுள்ளன. முக்கியமாக, இதில் வில்லனாக நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி கையில் துப்பாக்கியை வைத்திருக்கும் போது, "தம்பி விகே... கையில் துப்பாக்கி கிடைச்சா, யாரு என்னன்னு பாக்காம நீட்டிரூவியா?” என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது. இது நேரடியாகவே நடிகர் சிவகார்த்திகேயனைத் தாக்கும்படியாக உள்ளதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
Advertisement
Advertisement
காரணம், இந்தாண்டு பொங்கல் வெளியீடாக கருப்பு வரவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பராசக்தி திரைப்படம் திரைக்கு வந்ததால் கருப்பு வெளியீட்டை ஒத்திவைத்தனர். இதனாலேயே ஆர்ஜே பாலாஜி இந்த வசனத்தை வைத்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை ஒப்படைத்து, ’இனி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றது குறிப்பிடத்தக்கது.
The trailer for the movie Karuppu features a dialogue that appears to take a dig at actor Sivakarthikeyan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.