இன்னும் ஓடிடியில் வெளியாகாத பல்டி!
பல்டி ஓடிடி வெளியீடு குறித்து...
பல்டி திரைப்படம் பல மாதங்களாகியும் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தமிழில் மெட்ராஸ்காரன் படம் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பில் உருவான பல்டி திரைப்படம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது.
உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. நடிகர் சாந்தனு இரண்டாம் நாயகனாக நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும், ஓடிடியில் வெளியீட்டில் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. இந்தாண்டு ஜனவரி மாதம் அமேசான் பிரைமில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால், இன்று வரை வெளியீட்டைச் சந்திக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்த தொகை கிடைக்காததால் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
The film balti has not been released on OTT, even after several months.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.