பொங்கல் வெளியீட்டில் வரிசை கட்டும் திரைப்படங்கள்!
பொங்கல் வெளியீட்டில் புதிய திரைப்படங்கள்...
அடுத்தாண்டு பொங்கல் வெளியீட்டிற்கு நிறைய திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்தாண்டு தீபாவளி வெளியீடாக நடிகர் சூர்யாவின் சீன், ரன்பீர் கபூர் நடித்த ராமாயணா, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் - 2 ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஆரோக்கியமான வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன.
Advertisement
Advertisement
இதில், பட்ஜெட் ரீதியாக பெரிய படங்களான பா. இரஞ்சித்தின் வேட்டுவம், அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி - 3, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் பாக்கெட் நாவல், நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட கிளாடியேட்டர்ஸ், யூடியூபர் விஜே சித்துவின் டயங்கரம் ஆகிய திரைப்படங்கள் பொங்கல் வெளியீட்டைக் குறிவைத்துள்ளன.
இத்திரைப்படங்களில் விஜய் சேதுபதி, ஆர்யா ஆகியோர் மட்டுமே நட்சத்திர நடிகர்கள். அருள்நிதியின் டிமான்டி காலனி மூன்றாம் ஏற்கனவே எதிர்பார்ப்பு இருப்பதால் இப்படமும் அதிக திரைகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.