முகப்பு

தவறான செயல்... ரசிகரின் போஸ்டரை கண்டித்த அதிமனோகரம் இயக்குநர்!

ரசிகர் உருவாக்கிய போஸ்டர் குறித்து இயக்குநர் தருண் மூர்த்தி விளக்கம்....

6 வினாடிகள் முன்பு
தவறான செயல்... ரசிகரின் போஸ்டரை கண்டித்த அதிமனோகரம் இயக்குநர்!
நடிகர் மோகன்லாலுடன் இயக்குநர் தருண் மூர்த்தி
பகிர்:

இயக்குநர் தருண் மூர்த்தி அதிமனோகரம் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வமற்ற போஸ்டரை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

துடரும் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் தருண் மூர்த்தி நடிகர் மோகன்லால் கூட்டணி மீண்டும் அதிமனோகரம் என்கிற திரைப்படத்தில் இணைந்துள்ளது. இதில், மோகன்லால் காவல்துறை அதிகாரியாக நடிக்க அவருக்கு மனைவியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். குடும்ப கதையாக உருவான இது வருகிற டிச. 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் மோகன்லால் காவல்துறை வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரை உருவாக்கி புரமோஷனுக்கு பயன்படுத்தியிருக்கிறார்.

Advertisement

Advertisement

இதனைக் கண்ட இயக்குநர் தருண் மூர்த்தி, “ஒரு படைப்பாளியாக அடிக்கடி இது போன்ற ரசிகர்கள் உருவாக்கும் அதிகாரப்பூர்வமற்ற போஸ்டர்களை கண்டுகொண்டிருக்கிறேன். நாங்கள் ஒன்றைத் திட்டமிட்டு படத்தின் தன்மைக்கு ஏற்ப போஸ்டர்களை வடிவைக்கிறோம். ஆனால், அதற்கு தொடர்பில்லாதவர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அடையாள சின்னங்களையும் இயக்குநரின் பெயரையும் குறிப்பிட்டு இப்படியான போஸ்டர்களை உருவாக்குவது படத்தின் மீது குழப்பங்களை ஏற்படுத்துவதுடன் ரசிகர்களைத் தவறாக வழிநடத்தவும் கூடும்.

அதிமனோகரம் ஒரு குடும்பப் பின்னணி கொண்ட கதை. அதற்கு இணையாக காவல்துறை சார்ந்த காட்சிகளும் உண்டு. தயவுசெய்து படத்திற்கான எங்களின் திட்டத்திற்கும் அதன் புரோமோஷன் செயல்களுக்கும் மதிப்பளியுங்கள். நாம் ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

An inappropriate act... Director of 'Adhimanoharam' condemns a fan's poster!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.