கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் விஷ்ணு விஷால் - மமிதா பைஜூவின் இரண்டு வானம்?
ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் குறித்து...

ராட்சசன் படத்தின் மூலமாக கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டு வானம் திரைப்படம் கிறிஸ்துமஸுக்கு வெளியாக இருப்பதாக தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தப் படத்தில் நாயகனாக விஷ்ணு விஷால், நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்கள். மேலும் இதில் நடிகர் முனீஷ் காந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படம் கடந்த அக். 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கிறிஸ்துமஸை முன்னிட்டு டிச.24ஆம் தேதி படம் வெளியாகுமென தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் புதிய பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.
வாழ்க்கையில் உண்மையான அன்பு கிடைக்கும்போது, ஒரு மனிதருக்குள் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.