FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விரைவில் முடிவுக்கு வருகிறது காபி வித் கரண் நிகழ்ச்சி!

கரண் ஜோகரின் பிரபல நிகழ்ச்சி நிறைவடையப் போகிறது....

கரண் ஜோகர்
பகிர்:

பிரபல நிகழ்ச்சியான காபி வித் கரண் விரைவில் நிறைவடைய உள்ளதாக கரண் ஜோகர் அறிவித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபலங்களில் ஒருவர் கரண் ஜோகர். தர்மா புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், இயக்குநர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர். கரண் ஜோகர் வாழ்க்கையே சர்ச்சையும் ஜாலியும் நிறைந்தது என்பதால் ரசிகர்களின் பார்வையிலேயே இருக்கவும் செய்கிறார்.

பல திரைப்படங்களை இயக்கி, நடித்து கவனம் பெற்றாலும் கரண் ஜோகரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது அவரின் காபி வித் கரண் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில்பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களின் சொந்த மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசும்படி கேள்விகளைக் கேட்பார். மறைமுகக் காதல், அந்தரங்கமான கேள்விகளும் இருக்கும் என்பதால் பலரும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சி 2004 ஆம் ஆண்டு முதல் கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 சீசன்கள் 161 எபிசோடுகள் வரை ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறும் 9-வது சீசனுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்ய உள்ளதாக கரண் ஜோகர் அறிவித்துள்ளார். இதற்கு எந்த தனிப்பட்ட காரணங்களும் இல்லையென்றும் இயல்பாகவே நிகழ்ச்சி அதன் முடிவை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Karan Johar has announced that the popular show 'Koffee with Karan' is set to conclude soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments