அன்றும் - இன்றும் ஏழாம் அறிவு டாங்கிளி!
ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்த நடிகர் குறித்து...
ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜானி ட்ரி குயேனின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தற்காப்புக் கலை பயிற்சியாளரும் நடிகருமான ஜானி ட்ரி குயேன் நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். டாங்கிளியாக இவர் நடித்த கதாபாத்திரம் அப்போது பரவலமாகப் பேசப்பட்டது.
தொடர்ந்து, தமிழில் நடிகர் அதர்வாவுக்கு வில்லனாக இரும்புக் குதிரை திரைப்படத்தில் நடித்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையே, ஆசிய திரைப்படங்களில் அதிகம் நடித்த ஜானி ட்ரி குயேன் தற்காப்பு கலையையும் பயிற்சி அளித்து வந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவில் மிக இளைஞராகத் தோற்றமளித்த ஜானி தற்போது வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள், டாங்கிளிக்கே இதுதான் நிலைமை என்றால்... நம்மையெல்லாம் எப்படி நினைப்பது என சுயபகடியாக பதிவிட்டு வருகின்றனர்.
52 வயதாகும் நடிகர் ஜானி ட்ரி குயேன் சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
A photograph of actor Johnny Tri Nguyen, who acted in the movie 7aum Arivu, is going viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.