ஜியோஹாட்ஸ்டார் பிரிட்டனில் அறிமுகம்!
சர்வதேச அளவிலான விரிவாக்கத்தின் முதல் கட்டமாக ஜியோஹாட்ஸ்டார் பிரிட்டனில் தடம் பதிக்கிறது.
உலகளாவிய ஸ்ட்ரீமிங் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்குத் தளமான 'ஜியோஹாட்ஸ்டார்', செப்டம்பர் 2 அன்று பிரிட்டனில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகிறது.
சர்வதேச அளவிலான விரிவாக்கத்தின் முதல் கட்டமாக ஜியோஹாட்ஸ்டார் பிரிட்டனில் தடம் பதிக்கிறது. புதிய தொழில்நுட்பம், இன்டராக்டிவ் வசதிகள் மற்றும் ரசிகர்கள் பொழுதுபோக்கை விரும்பிக் கண்டுகளிக்கவும் அதில் பங்கேற்கவும் புதிய வழிகளை உள்ளடக்கிய ஓர் அனுபவத்தை ஜியோஸ்டார் அறிமுகப்படுத்துகிறது.
500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள ஜியோஹாட்ஸ்டார், பல மொழிகள், பிரிவுகள் மற்றும் வடிவங்களில் உள்ளடக்கங்களை வழங்கி, உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தொடக்கத்தின் மூலம், பிரிட்டன் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் ஜியோஹாட்ஸ்டாரின் 1,60,000+ மணிநேர பிரீமியம் உள்ளடக்கங்கள் மற்றும் ஆண்டுதோறும் புதிதாக இணையவுள்ள 30,000 மணிநேர உள்ளடக்கங்கள் கொண்ட பரந்த பொழுதுபோக்குத் தொகுப்பை அணுக முடியும். ஜியோஹாட்ஸ்டார் வெறும் ஸ்ட்ரீமிங் தளமாக மட்டுமின்றி, ஒரு பண்பாட்டுப் பாலமாகவும் காலடி எடுத்து வைக்கிறது. இது பிரிட்டன் பார்வையாளர்களை அவர்கள் விரும்பும் பொழுதுபோக்குகள், கதைகள் மற்றும் கலாசாரத் தருணங்களோடு நெருக்கமாக இணைக்கிறது. அதே வேளையில், பன்முகத்தன்மை கொண்ட கதைகள், மொழிகள் மற்றும் கலாசாரங்களை நாடித் தேடும் உலகளாவிய பார்வையாளர்களுக்காகத் தெற்காசியாவின் மிகச்சிறந்த உள்ளடக்கங்களைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்கிறது.
பொழுதுபோக்கைக் கண்டறிவதை அதனை ரசிப்பதைப் போலவே மிக எளிமையானதாக மாற்றும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்பு மற்றும் அதிநவீன தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை தொழில்நுட்பத்துடன் இயங்கும் இத்தளம், பார்வையாளர்கள் தங்கள் விருப்பம் மற்றும் மொழிகளுக்கு ஏற்ற கதைகளையும் நிகழ்ச்சிகளையும் சிரமமின்றி கண்டறிய உதவுகிறது. பிரிட்டனின் பன்மொழிப் பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளம், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், மராத்தி உட்பட 12-க்கும் மேற்பட்ட ஆசிய மொழிகளில் உயர்தர 'சப்டைட்டில்' மற்றும் 'டப்பிங்' வசதிகளை வழங்குகிறது.
ஜியோஹாட்ஸ்டாரின் சர்வதேச விரிவாக்கம் குறித்து ஜியோஸ்டார் நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவுத் தலைவர் அமித் மல்ஹோத்ரா கூறுகையில், "பல தசாப்தங்களாக, தெற்காசியக் கதைசொல்லல் முறையானது பிரிட்டனுக்கும், அதைத் தங்களது சொந்த வீடாகக் கருதுபவர்களுக்கும் இடையே ஒரு பண்பாட்டுப் பாலமாகத் திகழ்ந்து வருகிறது. இக்கதைகள் எல்லைகளையும் தலைமுறைகளையும் தாண்டிப் பயணித்து, தங்களது மையத்தில் உள்ள கலாசாரப் பிணைப்பைத் தக்கவைத்துக்கொண்டே புதிய பார்வையாளர்களுக்கு ஏற்ப தங்களை எவ்வாறு தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதே வியப்பிற்குரிய விஷயமாய் உள்ளது. பொழுதுபோக்கு எவ்வாறு நுகரப்படுகிறது என்பதைத் தொழில்நுட்பம் மாற்றக்கூடும், ஆனால் பார்வையாளர்களிடையே கதைகள், மொழிகள் மற்றும் கலாசாரங்களோடு இணைய வேண்டும் என்ற விருப்பம் என்றும் மாறாத ஒன்றாகவே இருக்கிறது என்பதையே இந்த நீடித்த பிணைப்பு நமக்கு உணர்த்துகிறது. பிரிட்டனில் ஜியோஹாட்ஸ்டாரை அறிமுகப்படுத்துவதன் மூலம், தெற்காசியப் பொழுதுபோக்கின் அசாதாரணமான பன்முகத்தன்மையை, புதுமையான வடிவங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைத்து, இந்த ஆழமான பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறோம்.
உள்ளடக்கங்களை எல்லைகள் தாண்டி எடுத்துச் செல்வது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல; பார்வையாளர்கள் அதை எவ்வாறு கண்டறிகிறார்கள், அனுபவிக்கிறார்கள் மற்றும் அதனோடு எவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்பதைப் புதிய கோணத்தில் மீண்டும் மறுவடிவமைப்பதே எங்களின் லட்சியமாகும். இந்தியாவில் நாங்கள் உருவாக்கியுள்ள பிரமாண்டத்தையும் புதுமைகளையும் உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும் அதே வேளையில், பிரிட்டன் பார்வையாளர்களுக்குத் தெற்காசியக் கதைசொல்லலை மிகவும் எளிதாக அணுகக்கூடியதாகவும், ஆழமாக அனுபவிக்கக்கூடியதாகவும், அவர்களின் வாழ்வியலுக்குப் பொருத்தமானதாகவும் மாற்றும் ஒரு மையத்தை நாங்கள் உருவாக்குகிறோம்", என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.