மோசமான விமர்சனங்களைப் பெறும் காந்தாரி..! டாப்ஸிக்கு மீண்டும் தோல்வி?
நேரடியாக ஓடிடியில் வெளியான நடிகை டாப்ஸியின் காந்தாரி படம் குறித்து...
நேரடியாக ஓடிடியில் வெளியான நடிகை டாப்ஸியின் காந்தாரி படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மீண்டும் டாப்ஸிக்கு தோல்வி படமாக அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
டாப்ஸி பன்னு (39 வயது) தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார் டாப்ஸி. தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.
Advertisement
Advertisement
கௌரவ் சோலங்கி இயக்கத்தில் டாப்ஸியின் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் திரையரங்கில் வெளியான ‘ஆசி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சோபிக்காமல் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், கனிகா திலோன் எழுதியுள்ள காந்தாரி படத்தினை தேவாஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேற்று (செப். 3) வெளியானது.
பழைய பாணியிலான படமென பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதனால்தான் நேரடியாக ஓடிடியில் வெளியானதா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Gandhari receives poor reviews! Another failure for Taapsee!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.