FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொடர் வெற்றிகள்... மமிதா பைஜூ, ஸ்வாசிகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!

மமிதா பைஜூ, ஸ்வாசிகா ஆகியோருக்கு பிரதீப் ரங்கநாதனின் படக்குழு சர்ப்ரைஸ் அளித்துள்ளது.

44 வினாடிகள் முன்பு
மமிதா பைஜூ, ஸ்வாசிகா ஆகியோருக்கு பிரதீப் ரங்கநாதனின் படக்குழு சர்ப்ரைஸ் அளித்துள்ளது.
பகிர்:

மமிதா பைஜூ, ஸ்வாசிகா ஆகியோருக்கு பிரதீப் ரங்கநாதனின் படக்குழு சர்ப்ரைஸ் அளித்துள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அவரது சொந்த இயக்கத்தில் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் வைத்துள்ள பிரதீப் படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

பிஆர் ஷோ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள பிரதீப், அவரது உதவி இயக்குநர்கள் 6 பேரை ஆல்பா யூனிட் என்கிற பெயரில் ஒரே படத்தில் இயக்குநராக்கி முதல் படத்தைத் தயாரித்து வருகிறார்.

பிரதீப் எழுதிய கதையில் உருவாகும் இப்படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, நடிகைகள் ஸ்வாசிகா, அனாமிகா மகி ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடிகைகள் மமிதா பைஜூ, ஸ்வாசிகா ஆகியோரைக் கொண்டாடும் விதமாக படக்குழு அவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளது.

மமிதா பைஜூ கடைசியாக நடித்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் படங்களும், ஸ்வாசிகா நடித்த இருமுடி படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் படக்குழுவினர் படப்பிடிப்பின்போது இருவருக்கும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதுதொடர்பான, விடியோவை பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

summary

Pradeep Ranganathan's film crew has surprised Mamitha Baiju and Swasika.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments