FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் புதுமை! புதிதாக 'ஜனநாயக அறை' திறப்பு

இதுவரை இல்லாத வகையில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் புதுமையாக ஜனநாயக அறை சேர்க்கப்பட்டுள்ளது குறித்து...

47 வினாடிகள் முன்பு
ஜனநாயக அறையில் போட்டியாளர்கள் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத வகையில் புதுமையாக ஜனநாயக அறை சேர்க்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் புரோமோவில் இருந்தே திறக்கப்படாமல் பூட்டியிருந்த ஜனநாயக அறை முதல் நாளிலேயே திறக்கப்பட்டுள்ளது. இதனால் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி செப். 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி இம்முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிரபலங்கள் மட்டுமே போட்டியாளர்களாக பங்கேற்றுவந்த நிலையில், இந்த சீசனில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் (ஷாமா, ஜேசன், முனியம்மா) போட்டியாளர்களாக விளையாடி வருகின்றனர். மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

போட்டியின் முதல் நாளிலேயே இந்த வார கேப்டனாக, அதாவது தலைவராக நடிகை ஷாதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிக் பாஸ் வகுத்த விதிகளின்படி இவர் தனக்கான ஆளும் அணியைத் தேர்வு செய்துள்ளார். எஞ்சிய போட்டியாளர்கள் எதிர் அணியினராக செயல்படவுள்ளனர்.

அரசியல் சட்டப்பேரவையை மையப்படுத்தி இந்த சீசன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக ஜனநாயக அறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆளும் அணியினர் ஒருபுறமும், எதிர் அணியினர் மறுபுறமும் அமர்ந்து, வீட்டின் பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம்.

ஆளும், எதிர் அணி தலைவர்களுக்கான இருக்கை - எக்ஸ்

ஆளும் அணியில் இருந்து சமையல், வீட்டுக் காவல், பாத்ரூம் கிளீனிங் போன்றவை செய்யப்படும். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை எதிர் அணியினர், ஜனநாயக அறை கூடும்போது அதனை சுட்டிக்காட்டலாம். இதற்காக ஜனநாயக அறை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் கூடிய ஜனநாயக அறை ஆலோசனையில், பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து எதிர் அணியின் தரப்பில் ஜேசன் உள்ளிட்டோர் ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைத்தனர்.

இதுவரை இல்லாத வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக ஜனநாயக அறை திறக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி ஆக்கப்பூர்வமாகச் செல்லும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Bigg boss 10 tamil update Innovation in Bigg Boss 10! Democracy Room opened

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments