மண்டாடி படப்பிடிப்பில் 20 முறை மரணத்திலிருந்து தப்பித்தேன்: சூரி
மண்டாடி படப்பிடிப்பு குறித்து சூரி பேச்சு...
நடிகர் சூரி மண்டாடி திரைப்படப் படப்பிடிப்பில் பலமுறை மரணத்திலிருந்து தப்பித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் மண்டாடி. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். மீனவர்களின் வாழ்வியலில் ஒன்றாக படகுப்போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இளம் வயதில் சிறந்த படகுப்போட்டி வீரரான நாயகன் ஒரு பிரச்னையால் படகுப்போட்டியிலிருந்து விலகுகிறார். நீண்ட காலம் கழித்து மீண்டும் அதற்கு எப்படி திரும்புகிறார் என்கிற கதையாக இப்படம் உருவாகியுள்ளது. படகுப்போட்டி கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் கடலிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, படப்பிடிப்பில் பலருக்கும் காயம் ஏற்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் சூரி, ”மண்டாடி படப்பிடிப்பின் போது, நிறைய முறை நூலிழையில் மரணத்திலிருந்து தப்பித்தேன். அதில், ஒருமுறை கிட்டத்தட்ட எமனைச் சந்தித்தே விட்டேன். இன்னும் கொஞ்சம் காலம் கழித்து வருகிறேன் என அதிலிருந்து மீண்டேன். என்னுடன் நடித்தவர்களில் மூன்று பேர் ஒரே நேரத்தில் மரணத்திலிருந்து தப்பித்தனர். எனக்கென்னவோ உலகம் முழுக்கச் செல்லும் எமன், மண்டாடி படப்பிடிப்பைப் பார்த்து, ‘எப்படியும் சில டிக்கெட்கள் தேறும்’ என அங்கேயே இருந்துவிட்டார் என நினைக்கிறேன். 250க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் படகுப்போட்டிக்காக சுற்றிக்கொண்டே இருந்தோம். பலரும் மோசமான விபத்துகளில் சிக்கியிருப்பார்கள். எப்படியோ தப்பித்துவிட்டோம் என இப்போது தோன்றுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
மண்டாடி திரைப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே நாளில் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படமும் வெளியாகவுள்ளது.
Actor Soori has mentioned escaping death multiple times during the filming of the movie mandaadi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.