கன்னடத்தில் அறிமுகமாகும் டூரிஸ்ட் ஃபேமலி நாயகி யோகலட்சுமி!
டூரிஸ்ட் ஃபேமலி நாயகி யோகலட்சுமி கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகுவது குறித்து...
டூரிஸ்ட் ஃபேமலி நாயகி யோகலட்சுமி தான் முதல்முறையாக கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகவிருப்பதாகக் கூறியுள்ளார். முதல்முறையாக ஹார்ட் பீட் தொடரில் நடித்து கவனம் பெற்றார்.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக அறிகமாகவிருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு நாளை (செப்.9) அறிவிக்கப்படவிருக்கிறது.
அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படத்தில் யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்குப் பிறகு அரசன் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பிக்காசோ எனப் பெயரிடப்பட்டுள்ள அபிஷன் - சிவ ராஜ்குமார் இயக்கிய படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தி கோர்ட் என்ற இணையத்தொடரும் வெளியானது. இந்த நிலையில், கன்னட படத்தில் அறிமுகமாகவிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கேவிஎன் புரடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் நாளை (செப்.9) காலை 11.09 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை யார் இயக்குகிறார்கள் என்ற தகவல் குறிப்பிடவில்லை. ஆனால், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
கன்னட படத்திற்கும் இதேபோல ஆதரவை ரசிகர்கள் அளிக்க வேண்டும் தனது பக்கத்தில் நடிகை யோகலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'Tourist Family' actress YogaLakshmi makes her debut in Kannada!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.