மாபெரும் ஆளுமை... சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
சாலமன் பாப்பையா மறைவுக்கு ரஜினிகாந்த் மறைவு...
மூத்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தமிழறிஞராக, பட்டிமன்ற நடுவராக தமிழ் மக்களிடம் புகழுடன் இருந்தவர் சாலமன் பாப்பைய்யா. உடல்நலக் குறைவால் கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை நாள்களில் புதிய திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு முன்பே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தைப் பார்த்துவிடும் காலங்கள் இருந்தன. 2000-களின் தொடக்கத்திலிருந்து சாலமன் பாப்பையா குரல் ஒலிக்காத தமிழ் இல்லங்கள் குறைவு என்னும் அளவிற்கு தேர்ந்த தமிழ்ப்பேச்சுத் திறனால் கவனிக்க வைத்தார்.
Advertisement
Advertisement
பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து சாலமன் பாப்பையா ஆச்சரியப்படுத்தினார். முக்கியமாக, சிவாஜியில் இவர் பேசிய வசனமான, ‘அங்கவை, சங்கவை’ இன்றுவரை பிரபலமான வசனங்களில் ஒன்று.
தற்போது, இவர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Actor Rajinikanth has expressed his condolences over the passing of veteran Tamil scholar Solomon Pappaiah.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.