FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கன்னட நடிகருக்கு பால்கே விருது

முதுபெரும் கன்னட நடிகா் அனந்த் நாக்-குக்கு 2024-ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

16 செப்டம்பர் 2026, 10:20 pm IST
நடிகா் அனந்த் நாக்
பகிர்:

முதுபெரும் கன்னட நடிகா் அனந்த் நாக்-குக்கு 2024-ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது அளிக்கப்படவுள்ளது. 78 வயதாகும் அனந்த் நாக் கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா்.

குஜராத்தில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வில் அவருக்கு பால்கே விருது வழங்கப்பட இருக்கிறது.

Advertisement

Advertisement

மிஞ்சினா ஒட, ஹம்ச கீதே, அங்கூா் உள்ளிட்ட அனந்த் நாக் நடித்த பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

கடலோர கா்நாடக பிராந்தியத்தைச் சோ்ந்த அனந்த் நாக் கா்நாடக அமைச்சராகவும் இருந்துள்ளாா். தூா்தா்ஷன் தொலைகாட்சியில் பிரபலமான மால்குடி டேஸ் தொடரிலும் நடத்துள்ளாா். கடந்த ஆண்டு அனந்த் நாக்குக்கு பத்ம பூஷண் விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

பிரதமா் நரேந்திர மோடி, கா்நாடக முதல்வா் சிவகுமாா் உள்ளிட்ட பலரும் அனந்த் நாக்குக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். கடந்த ஆண்டு மளையாள நடிகா் மோகன் லாலுக்கு பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரைத்துறையின் தந்தையாக புகழப்படும் தாதா சாஹேப் பால்கே பெயரில் 1969-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, இந்திய திரைத் துறையில் உயரிய கௌரவமாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments