FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தாண்டு தமிழ் சினிமாவில் அதிகமானோரால் ரசிக்கப்பட்ட யூத் படப் பாடல்கள்!

இந்தாண்டு தமிழ் சினிமாவின் மிக அதிகமாக ரசிக்கப்பட்ட பாடல்களாக யூத் படப் பாடல்கள் உள்ளது குறித்து...

16 செப்டம்பர் 2026, 7:36 pm IST
யூத் - படம் - எக்ஸ்
பகிர்:

இந்தாண்டு தமிழ் சினிமாவின் மிக அதிகமாக ரசிக்கப்பட்ட பாடல்களாக யூத் படப் பாடல்கள் உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் புதன்கிழமை (செப். 16) தெரிவித்துள்ளார்.

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.

இந்தப் படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் இணையத்தில் வைரலாகி இதுவரை 30 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், யூத் படத்தின் பாடல்கள் யூடியூபில் இதுவரை 53 கோடி பார்வைகளைக் கடந்ததாகவும் அதேபோல, ஸ்பாட்டிஃபையில் 11 கோடிக்கும் அதிகமான ரசிகர்களால் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தாண்டு தமிழ் சினிமாவின் மிக அதிகமாக ரசிக்கப்பட்ட பாடல்களாக யூத் படப் பாடல்கள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

summary

Music composer G.V. Prakash Kumar stated on Wednesday (Sept. 16) that the songs from the movie Youth are among the most appreciated Tamil film songs of the year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments