FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தெலுங்கு சினிமாவையோ அதன் ரசிகர்களையோ சொல்லவில்லை... நிறவெறி சர்ச்சைக்கு மண்டாடி பட இயக்குநர் விளக்கம்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி தனது சர்ச்சையான பேச்சுக்கு விளக்கம் அளித்திருப்பது குறித்து...

18 செப்டம்பர் 2026, 3:54 pm IST
மண்டாடி படப்பிடிப்பில் சுஹாஸ் உடன் மதிமாறன் புகழேந்தி. - படம்: எக்ஸ் / திமாறன் புகழேந்தி
பகிர்:

மண்டாடி படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி தனது சர்ச்சையான பேச்சுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் நாயகனாக சூரியும் வில்லனாக சுஹாஸும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடித்துள்ளார். அவரது நிறத்தை வைத்து தெலுங்கில் கேலி செய்யப்பட்டதால் அவர் தமிழில் நடிக்க யோசிப்பதாகவும் இயக்குநர் பேசியிருந்தார்.

Advertisement

Advertisement

”தமிழில் கருப்பு நிறம் ஒரு பிரச்சினையே இல்லை என்றும் இங்கு உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்” என இயக்குநர் பேசினார். இது மறைமுகமாக தெலுங்கு மக்களை அவர்கள் இனவெறி ரீதியாக செயல்படுவதாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

சமூக வலைதளத்தில் தெலுங்கு மக்கள் இயக்குநருக்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளார்கள். இது குறித்து இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நேற்று (செப்.17) மண்டாடி வெற்றி விழாவில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

நடிகர் சுஹாஸை நிறத்தை வைத்து கேலி செய்த இயக்குநர் ஒருவரைப் பற்றி மட்டுமே நான் பேசினேன். எனது வார்த்தைகள் தெலுங்கு மக்களையோ அல்லது அந்த ரசிகர்களையோ அல்லது தெலுங்கு சினிமாவை குறித்தோ நினைத்து கூறப்பட்டவை அல்ல.

சொல்லப்போனால், ஹைதராபாத் நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே தெலுங்கு சினிமாதான் முன்னணியில் இருக்கிறது எனக் கூறியுள்ளேன். தெலுங்கு சினிமா மற்றும் அந்த ரசிகர்கள் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது.

மண்டாடி படத்திற்கும் எனக்கும் அவ்வளவு அன்பைக் கொடுத்த தெலுங்கு மக்கள் மீது வேண்டும் என்றே குறைசொல்ல எனக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை.

எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டால் அதற்காக வருந்துகிறேன். தெலுங்கு மக்கள், தெலுங்கு சினிமா மீதான எனது நேசம் எப்போதும் மாறாதது. ஒருவர் அவரைப் பற்றி தவறாகப் பேசியதால், சுஹாஸுக்கு ஆதரவளிக்கவே அப்படி பேசினேன் தவிர அனைத்து தெலுங்கு மக்களையும் அப்படி பேசவில்லை எனக் கூறியுள்ளார்.

summary

Director Mathimaran Pugazhendhi clarify Mandaadi success meet telugu people controversy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments