FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாடோடி, யாத்ரீகன்... கலீல் ஜிப்ரான் கவிதையுடன் மிஷ்கினை வாழ்த்திய இயக்குநர் ராம்!

இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாளுக்கு வாழ்த்திய இயக்குநர் ராமின் இன்ஸ்டா பதிவு குறித்து...

20 செப்டம்பர் 2026, 4:34 pm IST
இயக்குநர் ராம் உடன் இயக்குநர் மிஷ்கின் - படங்கள்: இன்ஸ்டா / இயக்குநர் ராம்.
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாளுக்கு இயக்குநர் ராம் தனது இன்ஸ்டா பதிவில், ”நீங்கள் ஒரு நாடோடி, யாத்ரீகன்” என நெகிழ்ச்சியாக வாழ்த்தியுள்ளார்.

சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் அஞ்சாதே படத்தின் மூலம் தேசிய விருது வென்றார். பின்னர், பிசாசு, துப்பறிவாளன் என்ற வெற்றிப் படங்களை இயக்கினார்.

கடைசியாக அவர் இயக்கியுள்ள டிரைன் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. பிசாசு 2 திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியாகாமல் இருக்கின்றன.

Advertisement

Advertisement

இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் மிஷ்கின் அசத்தி வருகிறார். நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்த மிஷ்கின் தற்போது துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மிஷ்கின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமான அவரது நண்பரும் சக இயக்குநருமான ராம் தனது இன்ஸ்டா பதிவில் கூறியிருப்பதாவது:

கலீல் ஜிப்ரானின் இந்த வரிகள் உங்களுக்காகவே எழுதப்பட்டவை, அண்ணா:

"நீங்கள் ஒரு நாடோடி, ஒரு யாத்ரிகன்; ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அதிசயத்தைக் கண்டடையும் வல்லமை கொண்டவர்”.

இந்த பிறந்தநாளிலும், இந்த ஆண்டு முழுதும் நீங்கள் பல புதிய அதிசயங்களைக் கண்டுகொண்டே இருக்க வாழ்த்துகள்! ’லவ் யூ'ணா... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அண்ணா!

summary

Wanderer, pilgrim... Director Ram greets Mysskin with a poem by Kahlil Gibran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments