பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்தில் வெளியேறவுள்ள நபர் குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஏனெனில், பிக் பாஸ் வீட்டில் இருந்து லீடர் நாமினேஷன் மூலம் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவேத், சவின்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைப் புரிந்துள்ளனர்.
இவர்கள், தங்களுக்கு விருப்பம் இல்லாத அல்லது போட்டியில் நீடிக்கத் தகுதி இல்லாத போட்டியாளர் ஒருவரைத் தேர்வு செய்து, தங்கள் கைகளில் கட்டப்பட்டுள்ள கயிற்றுடன் இணைத்துக்கொள்கின்றனர்.
Advertisement
Advertisement
அவர்களுக்கிடையே வைக்கப்படும் போட்டியில் வெற்றிபெறும் நபர், பிக் பாஸ் வீட்டில் நீடிக்கலாம். தோல்வி அடையும் நபர், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 10 ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 3 வாரங்களைக் கடந்துள்ளது. இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மூன்றாவது வாரமாக, நடிகை ஆனந்தி நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக லீடர் எவிக்ஷன் புராசஸில் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவேத், சவின்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைப் புரிந்துள்ளனர்.
இவர்கள் வரும்போதே கைகளில் கயிறுடன் வருகின்றனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கின்படி, போட்டியில் நீடிக்கத் தகுதி இல்லாத நபரை கயிற்றின் மறுமுனையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு வைக்கப்படும் போட்டியில் வெற்றி பெறும் நபர் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம். தோல்வி அடையும் நபர் வெளியேற்றப்படுவார்.
இதனால் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவேத், சவின்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தொடர்வதற்காக கடுமையாகப் போராடுவார்கள் எனத் தெரிகிறது.
மறுமுனையில் தேர்வாகியுள்ள அஸ்மிதா, தன்யா, குமரன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிடக் கூடாது எனப் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த வாரத்தில் இந்த 6 பேரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதால், நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Bigg boss 10 tamil Who is going to leave this week from bb house
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.