சூப்பர் ஸ்டாருடன் உடற்பயிற்சி... ராஷி கன்னா பகிர்ந்த புகைப்படங்கள்!
ராஷி கன்னா பகிர்ந்த தர்மன் படப்பிடிப்பு கால புகைப்படங்கள்...
நடிகை ராஷி கன்னா இன்ஸ்டாகிராமில் தர்மன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது திரைப்படத்திற்குத் ’தர்மன்’ எனப் பெயரிட்டுள்ளனர். நடிகர்கள் ராம் பொத்தினேனி, சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார்.
இப்படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர ராஜ்கமல் பிலிம்ஸ் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மைசூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர்கள் ரஜினிகாந்த், ராம் பொத்தினேனி உடன் உடற்பயிற்சி செய்தபடி ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது என்று ராஷி கன்னா புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், படப்பிடிப்பு இடைவேளையில் மைசூரைச் சுற்றிப்பார்ப்பது, கோவில்களுக்குச் செல்வது, மசாலா தோசை சாப்பிடுவது என நாள்கள் சென்றுகொண்டிருப்பதாகவும் ராஷி கன்னா கூறியுள்ளார்.
Working out with the Superstar... Photos shared by Raashii Khanna!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.