முதல்முறையாக லண்டனில் படமாக்கப்பட்ட சுயாதீன பாடலில் மதுமிதா! வெளியீட்டுத் தேதி!
சுயாதீன பாடலில் மதுமிதா - பாலாஜி நடனமாடி உள்ளது தொடர்பாக...
முதல்முறையாக லண்டனில் படமாக்கப்பட்ட தமிழ் சுயாதீன இசைப் பாடல் குறித்த அறிவிப்பை நடிகை மதுமிதா வெளியிட்டுள்ளார்.
லண்டனில் படமாக்கப்பட்ட தமிழ் சுயாதீன இசைப் பாடலில் அய்யனார் துணை நாயகி மதுமிதா - பாலாஜி ஆகியோர் நடனமாடி இருக்கின்றனர்.
சரிகம செளத் இசை நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பாடல் வரும் அக். 7 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் பாடலுக்கு பூக்கி பொன்னம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளார். இயக்கம் மற்றும் நடன அமைப்பை சசி மேற்கொண்டுள்ளார்.
பூக்கி பொன்னம்மா பாடலுக்கான வரிகளை கு. கார்த்திக் எழுத, ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார்.
நடிகை மதுமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் பாடலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், லண்டனின் அழகிய பின்னணியில் மதுமிதா - பாலாஜி ஆகியோரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Madhumitha has announced a Tamil independent music song filmed in London for the first time.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.