FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை எப்போது?

2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்பது பற்றி..

17 செப்டம்பர் 2026, 5:51 pm IST
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு - ani
பகிர்:

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ், 2026 - 27ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக செப்டம்பர் மாத இறுதி வாரத்தில், தேர்வு அட்டவணை தேதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிடும், பிறகு அக்டோபர் - நவம்பரில் இறுதி அட்டவணை வெளியிடப்படும் என்பதால், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு cbse.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதனால், அட்டவணை வெளியானதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கமாக 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை பத்து மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில், உத்தேச பட்டியல் வெளியாகும். அதில், தேர்வு நடைபெறும் நேரம், செயல்முறைத் தேர்வுகள் குறித்த விவரங்கள் வெளியாகும். பிறகே, தேர்வு அட்டவணை வெளியாகும். அனைத்துமே அதிகாரப்பூர்வ இணையதளத்தில்தான் வெளியிடப்படும்.

வரும் 2027 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மொத்தமுள்ள 204 பாடங்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வை, சுமார் 45 லட்சம் மாணவர்கள் எழுதவிருக்கிறார்கள்.

summary

When will the CBSE Class 10 and 12 exam schedule for 2027 be released?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments