புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின்
புதிய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தவெக 105 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
திமுக 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், அதிமுக 50 -க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசாங்கத்துக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Congratulations to the new government! Udhayanidhi Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.