திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
தூத்துக்குடி இளைஞரின் காவல் மரணத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
தூத்துக்குடி இளைஞரின் காவல் மரணத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற 26 வயது இளைஞர், காவல்துறை விசாரணையின் போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 7 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்த அருணாச்சலம் இன்று உயிரிழந்தார். காவல்துறை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி, சடலத்தை பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காவல்துறையினர் அடித்ததாக அருணாச்சலம் பேசிய விடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை விளக்கம்
இந்த நிலையில், கைதி அருணாச்சலம் காவலர்கள் தாக்கியதால் உயிரிழக்கவில்லை என்று நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் விளக்கம் அளித்துள்ளார்.
காவல் நிலையத்துக்கு அருணாச்சலத்தை அழைத்து வந்தவுடன் அவர் மயங்கி விருந்தார். உடனடியாக உறவினர்களுக்கு தகவலளித்து மருத்துவனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கே மீண்டும் அவர் மயங்கி விழுந்தார். அந்த சிசிடிவி காட்சிகளும் இருக்கிறது.
அருணாச்சலத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் தலையில் கட்டி இருந்ததாக தெரிவித்தார்கள். அவரைக் காவலர்கள் யாரும் அடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
Rulers shedding tears over a movie - What is the answer for Arunachalam's family? Udhayanidhi condemns
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.