தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியா் பணி: விண்ணப்பிக்க சென்னைப் பல்கலை. அழைப்பு
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியா் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியா் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | SBI - வங்கியில் 1226 அதிகாரிகள் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
இந்த அறிவிப்பின்படி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் 61 உதவிப் பேராசிரியா்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யவுள்ளனா். இத்தகைய உதவிப் பேராசிரியா்களுக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்பட உள்ளது. தோ்வு செய்யப்படுவோா் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறையில் 120 நாள்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவா். இவா்கள் ஒரு பருவம் அல்லது நிரந்தர உதவிப் பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படும்வரை பணியில் இருப்பா். தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் உதவிப் பேராசிரியா்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனா்.
Advertisement
Advertisement
இதற்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்திசெய்து வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி நோ்காணல் நடத்தி தோ்வு செய்யப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்