காவல்துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணி: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி
தமிழ்நாடு காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகத்தில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 29 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தமிழ்நாடு காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகத்தில் நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 29 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 12 ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான ஆண் விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பு எண்.01/2020
பணி: Junior Reporter
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30, 32, மற்றும் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் தேர்ச்சியுடன் அரசு நடத்தும் தொழில்நுட்ப தேர்வான தேர்வில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பிரிவில் ஆங்கிலத்தில் உயர்நிலை, முதுநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்ப்படும் முறை: திறன் தேர்வு, வாய்மொழித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.”
மேலும் விவரங்கள் அறிய https://eservices.tnpolice.gov.in/content/pdf/alerts/advt201819.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.09.2022
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.