சிறை அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர்(ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை
தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர்(ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: சிறை அலுவலர்(ஆண்கள்) - 6
பதவி: சிறை அலுவலர்(பெண்கள்) 2
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.38,900 - 1,35,100
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை. ஏனையோர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 22.12.2022 முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை தாள்-1க்கான தேர்வும், பிற்பகல் 2.30 முதல் 5.30 வரை தாள்-2க்கான தேர்வும் நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.10.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/Jailor%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.