வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்
பட்ஜெட் 2026இல் புதிய மெட்ரோ ரயில் திட்டம் குறித்து...
சென்னை வடபழனி-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 118.9 கி.மீ. தொலைவிலான 3 வழித்தடங்களைக் கொண்ட கட்டம் 2-இன் பணிகள் ரூ.63,246 கோடியில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூா் சந்திப்பு வரையிலான தடத்தை, ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும் வகையில் 14.64 கி.மீ. தொலைவிலான 11 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்ட கட்டம் 2-இன் முதல்பகுதி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.
மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை, ஸ்ரீபெரும்புதூா் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவாா்சத்திரம் வரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளன. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து கா்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசுடனும் கா்நாடக அரசுடனும் இணைந்து தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Regarding the new metro rail project proposed between Hosur and Bommasandra, Karnataka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.