முகப்பு
அரசுப் பணிகள்

10, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அரசு வேலை: முழு விவரம் இதோ!

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 12 டிசம்பர் 2022, 10:02 am IST
பகிர்:



புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் இதர விவரங்கள்: 
பணி: கிளார்க்
காலியிடங்கள்: 165
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஏதாவதொரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

பணி: ஸ்டோர் கீப்பர்
காலியிடங்கள்: 55
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

வயதுவரம்பு: 29.12.2022 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments