FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புகைப்படங்கள்

முழு சூரிய கிரகணம்: புகைப்படங்கள்

ஆக. 12-ல் நிகழ்ந்த வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம்...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:20 pm IST
பகிர்:

சூரிய கிரகணம் நிகழும்போது இந்தியாவில் இரவு நேரம் என்பதால், இங்கு காண முடியவில்லை.

ஸ்பெயின் நாட்டில்...

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது, சூரியனின் முழு ஒளியும் மறைக்கப்பட்டு, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலைப்பொழுது போன்ற சூழல் உருவாகும்.

வடக்கு இத்தாலியில்... - Antonio Calanni

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வரும் நிகழ்வே சூரிய கிரகணம். இது ஆண்டுக்கு 2 முதல் 5 முறை நிகழும். இதில் சூரியனை நிலவு முழுவதுமாக மறைத்து, நிலவின் நிழல் மட்டுமே பூமி மீது விழும். 2024-க்குப் பின் உலகில் தெரியும் முழு சூரிய கிரகணம் இதுவே.

Advertisement

Advertisement

ரஷியாவில்...

மிகப்பெரிய சூரியனை, அதை விட சிறிய பூமியால் மறைக்கும்போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ ஒளிவளையம் மட்டுமே, வெண்வட்டமாகக் காட்சியளிக்கும். இதுதான் முழு சூரிய கிரகணமாக வர்ணிக்கப்படுகிறது.

லண்டனில்... - Frank Augstein

இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண உலகெங்கிலும் உள்ள வானியல் ஆா்வலா்களும், புகைப்படக் கலைஞா்களும் மிகுந்த ஆா்வத்துடன் கண்டுகளித்தனர்.

ஜெர்மனியில்... - Ebrahim Noroozi

இந்த முழு சூரிய கிரகணத்தின் முழுமையான பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போா்ச்சுகலின் சில பகுதிகள் வழியாகப் பயணித்தது.

ரஷியாவில்...

முழு சூரிய கிரகணத்தை வெறுங்கண்களால் பார்ப்பது நல்லதல்ல. அதுவும் சூரியனை முற்றிலும் சந்திரன் மறைத்திருக்கும்போது, சூரியன் லேசான வெளிப்படும் நேரம் அதிக வெளிச்சத்துடன் வரும் என்பதால், கண்பார்வை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.

ஸ்பெயினில்... - Bernat Armangue

வடக்கு ஸ்பெயினில் சூரியன் மறையும் அந்திவேளையில் இந்த கிரகணம் நிகழ்வதால், அடிவானத்தில் சூரியன் மறைவதைக் காணும் அழகிய காட்சி உலகப் பயணிகளைக் கவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

லண்டனில்...

அடுத்த ஆண்டு 2027 ஆகஸ்ட் மாதம் முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால், அதுவும் வட அமெரிக்கா, ஸ்பெயின், ஏமன் நாடுகளில் மட்டுமே காண முடியுமாம்.

பெர்லின் நகரில்...

இந்த கிரகணத்தின் உச்சக்கட்டத்தின்போது, நிலவு சூரியனை முழுமையாக மறைத்த நிகழ்வு 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments