ஆக. 12-இல் முழு சூரிய கிரகணம்: ஸ்பெயின், ஐஸ்லாந்தில் காண வாய்ப்பு!
விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், வரும் புதன்கிழமை (ஆக. 12) நிகழவுள்ளது.
விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், வரும் புதன்கிழமை (ஆக. 12) நிகழவுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலவு துல்லியமாக வரும்போது, சூரியனின் முழு ஒளியும் மறைக்கப்பட்டு, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலைப்பொழுது போன்ற சூழல் உருவாகும்.
சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ ஒளிவளையம் மட்டுமே வெண்வட்டமாகக் காட்சியளிக்கும் இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண உலகெங்கிலும் உள்ள வானியல் ஆா்வலா்களும், புகைப்படக் கலைஞா்களும் மிகுந்த ஆா்வத்துடன் காத்திருக்கின்றனா்.
Advertisement
Advertisement
ஆனால், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இந்த முழு சூரிய கிரகணம் தெரியாது. இந்த முழு சூரிய கிரகணத்தின் முழுமையான பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போா்ச்சுகலின் சில பகுதிகள் வழியாகப் பயணிக்கிறது. குறிப்பாக, வடக்கு ஸ்பெயினில் சூரியன் மறையும் அந்திவேளையில் இந்த கிரகணம் நிகழ்வதால், அடிவானத்தில் சூரியன் மறைவதைக் காணும் அழகிய காட்சி உலகப் பயணிகளைக் கவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளுக்கு நடுவிலும், கிரீன்லாந்தின் ஆா்க்டிக் பனிப் பகுதிகளிலும் இந்த வானியல் அதிசயத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.