FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நாளை முழு சூரிய கிரகணம்: எந்தெந்த நாடுகளில் காணலாம்? தவறவிட்டால்...

நாளை முழு சூரிய கிரகணம் நேரிடுகிறது, ஆனால் இந்தியாவில் தென்படாது என்பது பற்றி..

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 6:32 pm IST
பகிர்:

விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், புதன்கிழமை (ஆக. 12) நிகழவுள்ளது. எனினும், இந்த அற்புத நிகழ்வை இந்தியாவிலிருந்து காண இயலாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்போது, சூரியனின் முழு ஒளியும் மறைக்கப்பட்டு, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலைப்பொழுது போன்ற சூழல் உருவாகும்.

அதாவது, மிகப்பெரிய சூரியனை, அதை விட சிறிய பூமியால் மறைக்கும்போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ ஒளிவளையம் மட்டுமே, வெண்வட்டமாகக் காட்சியளிக்கும். இதுதான் முழு சூரிய கிரகணமாக வர்ணிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண உலகெங்கிலும் உள்ள வானியல் ஆா்வலா்களும், புகைப்படக் கலைஞா்களும் மிகுந்த ஆா்வத்துடன் காத்திருக்கின்றனா்.

கவலையளிக்கும் தகவல் என்னவென்றால், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இந்த முழு சூரிய கிரகணம் தெரியாது. காண முடியாது. ஏனெனில், இங்கு சூரிய கிரகணம் நிகழும்போது இரவு நேரம் என்பதுதான்.

இந்த முழு சூரிய கிரகணத்தின் முழுமையான பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போா்ச்சுகலின் சில பகுதிகள் வழியாகப் பயணிக்கிறது. குறிப்பாக, வடக்கு ஸ்பெயினில் சூரியன் மறையும் அந்திவேளையில் இந்த கிரகணம் நிகழ்வதால், அடிவானத்தில் சூரியன் மறைவதைக் காணும் அழகிய காட்சி உலகப் பயணிகளைக் கவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளுக்கு நடுவிலும், கிரீன்லாந்தின் ஆா்க்டிக் பனிப் பகுதிகளிலும் இந்த வானியல் அதிசயத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த ஆண்டு 2027 ஆகஸ்ட் மாதம் முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆனால், அதுவும் வட அமெரிக்கா, ஸ்பெயின், ஏமன் நாடுகளில் மட்டுமே காண முடியுமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments