யமுனை நதியின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ள நிலையில், நொய்டாவில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா ஈகோடெக் 3 பகுதியில் 350க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் 350-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது.ஈகோடெக் 3 அருகே ஹிண்டன் ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கின.
Advertisement
Advertisement
காரின் மேற்பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.நொய்டா ஈகோடெக் 3 புறநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.