உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவக் கூடிய உணவு
தேவையான பொருட்கள்
முட்டைக் கோஸ். - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
Advertisement
Advertisement
நெய் - சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான அளவு முட்டைக்கோஸ் எடுத்து சுத்தப் படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய முட்டைக் கோஸ் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் இரண்டையும் நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நீராவியில் வேகவைத்த முட்டைக் கோஸ் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
தீரும் குறைபாடுகள்
உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவக் கூடிய உணவு
சாப்பிடும் முறை
இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த முட்டைக் கோஸை காலை வேளையில் வெறும் வயிற்றில் ஒரு வேளை உணவாகவே எடுத்துக்கொள்ளவும். குறைந்தபட்சம் 48 நாட்களாவது சாப்பிட வேண்டும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell: 96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.