FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளா வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 73-ஆக அதிகரிப்பு

கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது. 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. 

மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 101 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன.

Advertisement

Advertisement

வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்டு 9-ஆம் தேதி முதல் தற்போது வரை இந்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது. அதிலும் புதன்கிழமை மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு கூடுதலாக 12 தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் வந்தடைந்துள்ளனர். அதுபோல இந்தியா-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments