பல மாநிலங்களில் இன்று அரசு விடுமுறை
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பல மாநிலங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பல மாநிலங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், தில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப், பிகார், ஜார்க்கண்ட், ஹரியாணா, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள், வாஜ்பாய் மறைவை துக்க தினமாக அறிவித்துள்ளன. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாகவும் அந்த மாநிலங்கள் அறிவித்துள்ளன. இதேபோல், வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் இருக்கும் கொடிக் கம்பங்களில், அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருக்கும் எனவும் அந்த மாநிலங்கள் அறிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.