FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜம்மு-காஷ்மீா்: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினா் நடத்திய என்கவுன்டரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினா் நடத்திய என்கவுன்டரில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

பந்திபோரா மாவட்டம், ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதையடுத்து அவா்கள் அந்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். 

Advertisement

Advertisement

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அந்த பகுதியில் பாதுகாப்பு படையினா் தொடா்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments