FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு! 

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Updated On : 16 மார்ச் 2018, 6:54 pm IST
பகிர்:

புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது 

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.   

இந்த வழக்கின் முக்கிய ஆதாரத்தை கார்த்தி சிதம்பரம் அழித்துவிட்டார், ஆதலால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம் செய்தது.

Advertisement

Advertisement

அதற்கு வழக்கு ஆதாரங்களை தான் அழித்ததற்கான ஆதாரத்தை சிபிஐ காண்பித்தால், ஜாமின் மனுவை திரும்ப பெற தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பும் வாதிட்டது. 

கார்த்தி சிதம்பரத்துக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரை ஜாமினில் வெளியில் விட்டால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என சிபிஐ தெரிவித்திருந்தது.

இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments