ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்புடன் தொடர்பு: ஜலந்தரில் மூன்று கல்லூரி மாணவர்கள் கைது
ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று கல்லூரி மாணவர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகர்: ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று கல்லூரி மாணவர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகிலுள்ள ஷாக்பூரில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது என்ற தகவல் ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸுக்கு கிடைத்தது.
உடனே அவர்கள் அந்த கல்லூரி விடுதிக்கு வந்து சோதனை நடத்தினர். அவர்களுடன் பஞ்சாப் மாநில போலீசாருடன் சேர்ந்து சோதனை நடத்தினர். அப்போது ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்களை காவல்துறை கைது செய்தது.
Advertisement
Advertisement
அத்துடன் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.