ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் அறிவிப்பு!
ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஹேலி மேத்யூஸ், இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்கிரம மற்றும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நாட் ஷிவர் பிரண்ட் ஆகியோர் உள்ளனர்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய ஹேலி மேத்யூஸ் 265 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் இரண்டு சதங்கள் அடங்கும். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்தத் தொடரில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Advertisement
Advertisement
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வெல்ல, ஹர்ஷிதா சமரவிக்கிரம முக்கிய பங்காற்றினார். அந்தத் தொடரில் அவர் 173 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் அவர் சதம் விளாசி அசத்தினார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான நாட் ஷிவர் பிரண்ட் மிகவும் நன்றாக விளையாடினார். அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடிய அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 75 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஷிவர் பிரண்ட் 58 ரன்கள் எடுத்தார்.
ஹேலி மேத்யூஸ், ஹர்ஷிதா சமரவிக்கிரம மற்றும் நாட் ஷிவர் பிரண்ட் இவர்கள் மூவரில் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
The ICC has announced the nominees for the Player of the Month award for July today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.